என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செயல் வீரர்கள் கூட்டத்தில் துரை வைகோ பேசினர்.
    X
    செயல் வீரர்கள் கூட்டத்தில் துரை வைகோ பேசினர்.

    தமிழகம் சமத்துவம் கொண்ட நாடு: இதன் மாடல் திராவிடம் தான்

    தமிழகம் சமத்துவம் கொண்ட நாடு; இதன் மாடல் திராவிடம் தான் என மயிலாடுதுறையில் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் துரை.வைகோ பேசியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ம.தி.மு.க மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மார்க்கோனி தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் முருகன், நாகை மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினருமான,  நகர செயலாளர் மார்க்கெட் கணேசன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க பொதுச் செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது:

    தமிழகத்தில் மின்-வெட்டுக்கு காரணம் ஒன்றிய அரசுதான். வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தது காரணம். முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அவர் தனியார் மின்சார துறைகளிடமிருந்து ஒப்பந்தம் செய்து வருகிறார். கூடிய விரைவில் சரியாகிவிடும்.

    தமிழ்நாடு சமத்துவம் கொண்ட நாடு. இதன் மாடல் திராவிடம்தான். தமிழகத்தில் மதவாதிகளையும் கலவரம் தூண்டுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். 

    தமிழக அரசுக்கு பாலமாக எப்போதும் இருக்கும் மதிமுக. தமிழக மக்களுக்கு துரோகமும், வஞ்சகமும் செய்துவருகிறார் கவர்னர் கே.என்.ரவி இவர் பா.ஜ.கவின் ஆளுநர். 

    மத்திய பல்கலைக்-கழக தேர்வு, நீட் தேர்வு போன்றவை மத்திய அரசின் மக்கள் விரோத செயல் தான் என பேசினார். 
    நிகழ்ச்சியில் கழகப் பேச்சாளர் அழகிரி மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி தலைவர்கள், கிளை செயலா-ளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×