என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

    சீர்காழியில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.ம.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சீர்காழி:

    தமிழக அரசு சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றுஅ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தார்.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் எதிரே அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீர்காழி நகர செயலாளர் அருண்பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் பங்கேற்று கண்ட உரையாற்றினார்.

     இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வாய்மை இளஞ்சேரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்று சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
    Next Story
    ×