என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்வர் ஸ்டாலின்
    X
    முதல்வர் ஸ்டாலின்

    தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டங்கள்- செங்காடு கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

    ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில், நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
    சென்னை:

    பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    Next Story
    ×