என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    லால்குடி மேல வாழை திருக்குடும்ப தேவாலய புனிதப்படுத்தும் விழா

    லால்குடி மேல வாழை திருக்குடும்ப தேவாலய புனிதப்படுத்தும் விழா நாளை நடக்கிறது.
    திருச்சி:

    கும்பகோணம் மறை மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி லால்குடி மேல வாழை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட திருக்குடும்ப தேவாலயத்தின் புனிதப்படுத்தும் விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

    கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் எஃப். அந்தோணி சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேவாலயத்தை புனிதப்படுத்தி பிரார்த்தனை செய்கிறார். லால்குடி மறைமாவட்ட பேராயர் ஆர். பீட்டர் ஆரோக்கியதாஸ் முன்னிலை வகிக்கிறார்.

    அதைத் தொடர்ந்து இரவு 10 மணி அளவில் புனித சூசையப்பர் ஆடம்பர சப்பர பவனி நடக்கிறது. நாளை மறுநாள்( திங்கட்கிழமை) புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி நடைபெறுகிறது. திருக்குடும்ப தேவாலய புனிதப்படுத்தும் விழாவில் அனைவரும் பங்கேற்குமாறு பெரியவர் சீலி பங்குத்தந்தை சிரில் ராபர்ட் அழைப்பு விடுத்துள்ளார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தொழிலதிபரும் தி.மு.க. பிரமுகருமான எஞ்சினியர் மரியா பிரான்சிஸ் மற்றும் மேல வாழை கிராம பொதுமக்கள், கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர். இந்த தேவாலயம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×