என் மலர்
உள்ளூர் செய்திகள்

பச்சைமலையில் எஸ்பி சுஜித்குமார் டிஎஸ்பி முத்தரசு இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருடன் கோரையாறு அருவி பகுதியில் ஆய்வு
பச்சைமலையில் எஸ்.பி. சுஜித்குமார் திடீர் ஆய்வு
உப்பிலியபுரம் பச்சைமலையில் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுஜித்குமார் திடீர் ஆய்வில் ஈடுப்பட்டார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சைமலை பகுதிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் அதிரடியாக பார்வையிட்டார்.
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலை டாப்செங்காட்டுப்பட்டி மலைப்பகுதிக்கு இன்று காலை 7 மணியளவில் எஸ்.பி. சுஜித்குமார் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
டாப்செங்காட்டுப்பட்டியில் 1 கிமீ தொலைவு நடைபயணம் மேற்கொண்ட சுஜித்குமார், வண்ணாடு கோரையாறு அருவியை பார்வையிட்டர்.
ஆய்வின் போது திருச்சி மாவட்ட மதுவிலக்கு காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசு, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி, உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பெரியமணி, பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story