என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு அலங்காரத்தில் புவனேஸ்வரி அம்மன்
    X
    சிறப்பு அலங்காரத்தில் புவனேஸ்வரி அம்மன்

    ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசண்டி ஹோமம்

    திருச்சி கே.கே,நகரில் ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசண்டி ஹோமம் நடை பெற்றது.
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் ஐயப்பன்நகரில்   புவனேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சண்டி ஹோமம் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த சண்டி ஹோமமானது கோவிலின் துவக்க நாளை முன்னிட்டு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்த கோவில் உருவாக்கப்பட்டு  38 ஆண்டுகளை குறிக்கும் வகையில் 38வது மங்கள மகா சண்டி ஹோமம் நேற்று இரவு பூர்வாங்க பூஜையுடன் துவங்கியது.

    இதைத் தொடர்ந்து இன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த ஹோமம் ஆனது மதியம் 1 மணி அளவில் பூர்ணாகுதி உடன் நிறைவு பெற்றது.

    இதில் இந்த பகுதியில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×