என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
வேலை வாய்ப்பு சந்தையில் உலகளவில் போட்டியிடும் அளவிற்கு மாணவர்களை உருவாக்க வேண்டும்
வேலை வாய்ப்பு சந்தையில் உலகளவில் போட்டியிடும் அளவிற்கு மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று காந்திகிராமம் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் தெரிவித்தார்.
கரூர் :
கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் 19-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுட காந்திகிராமம் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் எம்.ஜி.சேதுராமன் பட்டமேற்பு விழாவில் பேசியதாவது,
உலகளவில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நாளந்தா, வல்லாபி ஆகிய பல்கலைக் கழங்கள் மூலம் உயர்கல்வியில் கலை, வேதம், மருத்துவம், வானியல் சாஸ்திரம், கட்டிடக்கலை ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் உயர்கல்வியில் பெரியளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் உயர்கல்வி பயில்வோர் சதவீதம் 27.1 சதவீதமாக உள்ள நிலையில் தமிழக அளவில் அது இரு மடங்காக கிட்டத்தட்ட 51 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர். உயர்கல்வி முறையில்
சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து 3வது இடத்தில் இந்தியா உள்ளது. கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் வேலைவாய்ப்பு சந்தையில் உலகளவில் போட்டியிடும் வகையில் மாணவர்களை உருவாக்கிடவேண்டும்.
தமிழக அரசு ஆய்வுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்த பெருமுயற்சிகளை செய்து வருகிறது. இந்திய கிராமங்களில் வாழ்கிறது. ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் சிறப்பு நடவடிக்கை எடுப்பது தேவையாக இருக்கிறது. சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மேற்கொள்ளவேண்டும் என்றார். விழாவில் 1,500 மாணவ, மாணவிகள் பட்டமேற்றனர்.

Next Story