என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் தொடங்கி வைத்த போது எடுத்தப்படம்.
தடைப்பட்ட அரிஸ்டோ மேம்பால பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும்- அமைச்சர் தகவல்
தடைப்பட்ட அரிஸ்டோ மேம்பால பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
திருச்சி:
காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தினை திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கிவைத்தார்.
பின்னர் நகர்புற அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது, காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாருவதற்கு ரூ.80கோடி அரசானை வழங்கி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ.18.75 கோடி மதிப்பீட்டில் 232.59கி.மீ நீளத்திற்கு கால்வாய்கள், ஆறுகள், மற்றும் வடிகால்கள் 90பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த கனமழையினால் திருச்சி மாவட்டத்தில் அரியாறு, கோரையாறு, நந்தியாறு மற்றும் குடமுருட்டி ஆகிய ஆறுகளில் உடைப்புகள் ஏற்பட்டு திருச்சி மாநகரின் புறநகர், மற்றும் மாநகருக்குள் வெள்ளம் புகுந்து பொது மக்கள் பெரிநும் பாதிப்புக்குள்ளாயினர். இப்பகுதிகளை தூர்வார இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் அரிஸ்டோ மேம்பாலம் முடிப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும். வயலூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருவதால், அதற்கு மாற்றாக உய்யகொண்டான் கரை முதல் அல்லித்துறை வரை சாலையை அகலப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
காவிரியில் புதிய பாலம் கட்டும் ப ணியும், பழைய பாலத்தை உறுதிபடுத்தும் பணியும் விரைவில் தொடங்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Next Story