என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    ஸ்ரீரெங்கம், சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம்

    ஸ்ரீரெங்கம் மற்றும் சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக பிரசாதம் வழங்கம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    திருச்சி:

     தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை இன்று சென்னை வடபழனி முருகன் கோவிலில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தொடங்கி வைத்தார்.

    அதன்படி ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெற்ற காணொளி காட்சி விழாவில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர்  மாரிமுத்து மற்றும் திருச்சிமண்டல இந்து சமய அறநிலையத்துறைய மண்டல ஆணையர் செல்வராஜ் ஆகியோர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு லட்டு, மைசூர்பாகுகளை பிரசாதமாக  வழங்கினார் ,

     விழாவில் திருச்சி மாநகராட்சி துணைமேயர் திவ்யா தனகோடி, திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஆண்டாள் ராம்குமார், கோவில் உதவி ஆணையர்  கந்தசாமி , மேலாளர் உமா, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ,  கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்,

    ஸ்ரீரங்கம் கோவிலில் ஒரு வருடத்திற்க்கு ரூபாய் 1 கோடி மதிப்பில் சுமார் 25 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது .  இதே போல் மண்ணச்சநல்லூர் சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் நடைபெற்றது.
    Next Story
    ×