என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மளிகை கடையில் கொள்ளை

    மளிகை கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்

    திருச்சி :

    திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியை சேர்ந் தவர் கிஷோர்குமார்(வயது39). இவர் மேல அம்பிகாபுரத்தில் ஜெயஸ்ரீ என்கிற மளிகை கடை நடத்தி வருகிறார்.

    வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்ற அவர் மறுநாள் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்-துள்ளார். கொள்ளையர்கள் கடையில் இருந்த செல்போன்,  பற்பசை, சோப்பு, தேங்காய் எண்ணெய் ஆகிய பொருள்-களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஈ.பி. ரோட்டை சேர்ந்த பரணிகுமார்(21), அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்த நிரஞ்சன்(17), லோ-கேஸ்வரன்(18) ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×