search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பருத்தி பயிரை காக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    நன்னிலம் தாலுகாவில் கோடை மழையால் பாதித்த பருத்தி பயிரை காக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பெய்த கோடை மழையால், பருத்தி செடிகள் விளைச்சல் பாதிப்பு அடைந்தது. தற்போது பருத்தி விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள், பருத்திச் செடியை சுற்றி மழையால் வளர்ந்த புற்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பல இடங்களில் பருத்தி செடி இலைகள் சிவந்தும், இலைகள் வாடி போய் காணப்படுகிறது. தற்போது செடியை மீண்டும் வளர்ச்சி பெற, உரம் மற்றும் தெளி மருந்துகள் அடித்து வருகின்றனர். ஆனால் செடி வாடல் நோய் பல இடங்களில் மாறவில்லை. தற்போது மீண்டும் பருத்தி செடிகளுக்கு மண் அணைத்து உரமூட்டி வருகின்றார்கள். இதனால் விவசாயிகள் தாங்கள் நினைத்த அளவிற்கான பருத்தி விளைச்சல் இருக்குமா என கவலை அடைந்து வருகிறார்கள்.

    கோடை மழையால் பாதித்த பருத்திச் செடிகளை பாதுகாக்க, வேளாண் அலுவலர்கள், நன்னிலம் தாலுகா பகுதியில் உள்ள, பாதிப்படைந்த பருத்திச் செடி வயல்களை பார்வையிட்டு, பருத்தி விளைச்சல் சிறப்பாக அமைய, தகுந்த ஆலோசனைகளையும் மருந்துகளையும் பரிந்துரைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு சிறப்பாக பருத்தி விளைச்சல் இருந்து அதிக விளைச்சல் காரணமாக, விலை போகாத நிலையில், இந்தாண்டு பருத்தி விவசாயம் குறைவான விவசாயிகளை விவசாய மேற்கொண்டுள்ளார்கள்.

    இந்நிலையில், இந்த ஆண்டு பருத்தி விளைச்சலுக்கு நல்ல மகசூல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கோடை மழையால் பருத்தி செடிகள் பாதித்தது, விவசாயிகளை கலக்கம் அடைய செய்துள்ளது. விவசாயி கலக்கத்தைப் போக்கும் வகையில், வேளாண்மைத் துறையினர் விவசாயிகளுக்கு பருத்தி விவசாயம் மகசூல் சிறப்பாக அமைய உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×