என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    மாட்டு வண்டியில் மணல் எடுக்க கோரிக்கை

    மாட்டு வண்டியில் மணல் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கரூர்:

    மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்-களை தமிழக அதிகா-ரிகளால் அமலாக்கும் செயலை எதிர்த்து ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டக்-குழு சார்பில் மாவட்டத்தலைவர் கே.குப்புசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது.

        ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன், இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்டச்செயலாளர் கே.கலாராணி, அகில இந்திய இளைஞர் பெருமன்றம் (ஏஐஒய்எப்) கரூர் மாவட்ட செயலாளர் எம்.லட்சுமிகாந்தன் ஆகியார் சிறப்பு-ரையாற்றினர்.

    உடல் உழைப்பு சங்கத்தைச் சேர்ந்த கே.தமிழ்செல்வன் பி.சக்திவேல், கட்டிட சங்கம் யு.கந்தசாமி, வீரராக்-கியம் சித்திரைசெல்வி, ஆட்டோ சங்க முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுமான சங்கம் ஆர்.பாக்கியம் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில், மாட்டு வண்டியில் மணல் எடுத்து மக்களுக்கு வழங்க அனுமதிக்கவேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் ஆட்டோ தொழிலாளர்களின் தொழில் பாதிப்புகளை ஏற்று மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நலிந்து வரும் கரூர் கைத்தறி தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்கவண்டும்.

     அனைத்து உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்கவேண்டும். கட்டிட தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மீனவர்கள் உள்ளிட்ட உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியங்களை பாது-காத்திடவேண்டும்.

    நலவாரிய செயல்பாட்டை எளிமைப்படுத்த வாரிய அலுவலகப்பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்களை பெற்று உடனடியாக உதவித் தொகை வழங்கவேண்டும். ஆர்ப்பாட்ட முடிவில் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

    Next Story
    ×