என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவையில் கஞ்சா விற்ற கேரளா வாலிபர்கள் 3 பேர் கைது

    அப்போது அங்கு வாலிபர்கள் 3 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.
    கோவை: 

    கோவை கே.ஜி.சாவடி போலீசாருக்கு திருமலையம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-&இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு  சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாலிபர்கள் 3 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்து கொண்டி ருந்தனர். இதனை பார்த்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். 

    சோதனையில் அவர் களிடம் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர்கள் கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த நந்து கிருஷ்ணா (வயது 23), அனுராக் (22), திருசூரை சேர்ந்த அதுல் (21) என்பதும் இவர்கள் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும், வேலையில் போதிய வருமானம் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×