என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொள்ளாச்சியில் கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்

    கோழிப்பண்ணை-யாளர்கள் 60 நாட்கள் இரவு, பகலாக பாடுபட்டு கோழி வளர்த்து கொடுக்கிறோம்.
    பொள்ளாச்சி: 

     கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் பண்ணை அமைத்து கறிக்கோழி அதிக அளவில் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். 

    இதற்கு தனியார் நிறுவனத்தினர் கறிக்கோழி வளர்ப்பு கூலியாக கிலோ ஒன்றுக்கு ரூ.6.50 பைசா நிர்ணயம் செய்துள்ளனர். விலைவாசி உயர்வு காரணமாக கூலியை உயர்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் பொள்ளாச்சி விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு பணியாளர்கள் நல சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் நலச்சங்கத்தினர் பேசியதாவது:-

    பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்து-க்கடவு, கோட்டூர், சுங்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 350-க்கும் அதிகமான கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. அவர்களுக்கு 20 தனியார் நிறுவனங்கள் மூலம் குஞ்சுகள் வளர்ப்புக்கு கொடுக்கப்படுகின்றன. 

    தனியார் நிறுவனத்தினர் மருந்து, தீவனம் வழங்கு-கின்றனர். வளர்க்கப்பட்ட பிறகு கிலோவுக்கு கூலியாக  ரூ6.50 நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது. 

    தற்போது கோழிப்பண்ணைகளில் இடு-பொருட்களான தேங்காய் நார், கரி, வேலை ஆட்கள், மின்சாரக்கட்டணம், பண்ணை பராமரிப்பு தொகை, கோழிக்கான ஊட்டச்சத்துக்கான கடலை புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, கருப்பட்டி, தயிர், அகத்திக் கீரை என இதர செலவுகளுக்கான தொகை உயர்ந்துவிட்டது. 

    கோழிப்பண்ணையாளர்கள் 60 நாட்கள் இரவு, பகலாக பாடுபட்டு கோழி வளர்த்து கொடுக்கிறோம். விலைவாசி உயர்வு காரணமாக தற்போது உள்ள குறைந்தபட்ச கூலி போதுமானதாக இல்லாததால் தொழிலை கைவிடும் நிலை உள்ளது. வளர்ப்புக்கு குஞ்சுகள் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் கூலியை உயர்த்திக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் கட்டுபடியாகும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×