என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பொள்ளாச்சியில் கட்டிட தொழிலாளி தற்கொலை
குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் விபரீத முடிவை எடுத்தார்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி குறிச்சி நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 65). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சாந்தகுமாரி. சுந்தரத்துக்கு குடிப்பழக்கம் உள்ளது.
தகராறு
இதனால் அடிக்கடி கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சுந்தரம் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழந்தார்.இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மகாலிங்கம்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூர் ராசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (41). டிரைவர். இவர் லோன் மூலம் மினி வேன் வாங்கினார். அதில் காய்கறிகளை ஏற்றி மார்க்கெட்டுக்கு வினியோகம் செய்து வந்தார்.
ஆனால் அதில் அவருக்கு போதிய வருமானம் இல்லாமல் நஷ்டம் அடைந்தார். இதனால் சிவக்குமாரால் மினி வேன் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷத்தை குடித்து மயங்கினார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






