என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் நடந்த தீ தொண்டு நாள் வார விழா செயல் இயக்குநர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்
தீத்தொண்டு நாள் வார விழா
தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் தீத்தொண்டு நாள் வார விழா நடைபெற்றது.
கரூர்:
தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சார்பில் தீ தொண்டு நாள் வார விழா கடந்த 14ந் தேதி தீயணைப்பு வீரர்களின் வீர தியாகத்தை நினைவூட்டும் வகையில் வீரவணக்க செய்தியினை செயல் இயக்குநர் (இயக்கம்) கிருஷ்ணன் முகவுரை வழங்கி பேசுகையில்,
நமது ஆலையில் பணிபுரியும் அனைவரும் தங்களது இல்லம் மற்றும் பணிபுரியும் இடத்தையும் தூய்மையுடன் வைத்திருந்து தீ ஏற்படுவதை தவிர்க்க உதவிடுவோம் என பேசினார். அதை தொடர்ந்து, காகித ஆலையில் பணிபுரியும் அதிகாரிகள்,
தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் முன்னிலையில் தீ தொண்டு நாள் உறுதிமொழியை பொது மேலாளர் (உற்பத்தி மற்றும் திட்டம் ஒருங்கிணைப்பு) வரதராஜன் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர்கள் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை) ராதாகிருஷ்ணன், வெங்கடேஸ்வரன் (பினிஸ்ஸிங்), துணை மேலாளர் (மனிதவளம்) வெங்கடேசன், டிஎன்பிஎல் விஜிலென்ஸ் காவல்துறை ஆய்வாளர் வைத்தியநாதன் மற்றும் உதவி மேலாளர் (பாதுகாப்பு) சங்கிலிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாதுகாப்புத்துறையினர் செய்திருந்தனர்.

Next Story