என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் கலெக்டர்
    X
    விழுப்புரம் கலெக்டர்

    கண்டாச்சிபுரம் ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி- கலெக்டர் ஆய்வு

    விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் ஆதிசக்தி சிவக்குமார் மன்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், கண்டாச்சிபுரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அவர் கண்டாச்சிபுரம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2021 - 2022 பொதுநிதியின்கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருதை பார்வையிட்டு, பணி தொடங்கியது முதல் திட்டமிட்ட காலத்திற்குள் பணியை முடித்து மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திடும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் பயிலும் வகுப்பறைக்குச் சென்று மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து, கண்டாச்சிபுரம் ஊராட்சியில், ஓடைப்பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பொதுமக்களின் அத்தியாவசிய பயன்பாட்டிற்குரிய இப்பாலத்தை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் ஆதிசக்தி சிவக்குமார் மன்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×