என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
    X
    முகாம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

    சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம்

    எம். களத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்றது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் எம். களத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்றது. முகாமில் பட்டா மாறுதல், பெயர் திருத்தம், உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள்மனுக்களை கொடுத்தனர்.

    முகாமிற்கு தொட்டியம் வட்டாட்சியர் சத்யநாராயணன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் கவிதா எம். களத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.தண்டபாணி, முன்னாள் துணைத்தலைவரும் தி.மு.க.பொறுப்புக் குழு உறுப்பினருமான கோகிலா கண்ணதாசன்,

    எம்.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன், ஏழூர்பட்டி வரிஆய்வாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமநிர்வாக அலுவலர்கள் திருஞானம், ராதாகிருஷ்ணன், முருகானந்தம், கலைவாணி, தனலட்சுமி,

    வெங்கடேஷ், சர்வேயர்கள் வனிதா, தேவிகா, ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். இதில் பொதுமக்களுக்கு திருத்தம் செய்யப்பட்ட கணினி பட்டாவை தொட்டியம் வட்டாட்சியர் சத்யநாராயணன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சிசெயலாளர்டி.கார்த்திக், சேர்வைகாரன்பட்டி, மேக்கநாயக்கன்பட்டி, எம்.களத்தூர், பில்லுக்காடு, பொதுமக்கள், விவசாயிகள், திரளாக கலந்து கொண்டனர் முடிவில் எம்.களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் திருஞானம் நன்றி கூறினார்.
    Next Story
    ×