என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    தருமபுரியில் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

    தருமபுரியில் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தருமபுரி, 

    தமிழ்நாடு அரசு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடக் கோரி சட்டசபையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி  தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். கட்டுமான சங்க மாவட்ட தலைவர் குழந்தைவேலு, மாவட்ட பொருளாளர் விஜயா, மாவட்டக்குழு உறுப்பினர் பழனியம்மாள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.

    ஆர்பாட்டத்தில் நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். சட்ட விதிகளை தன்னிச்சையாக தொழிலாளர்கள் மீது திணிப்பதை தடுக்க வேண்டும்.தொழிலாளர் துறையில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும். 

    தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தமிழக அரசு கொள்கைகளுக்கு எதிராக ஒன்றிய அரசின் சட்டங்களை அமுல்படுத்துகிற மாநில தொழிலாளர் துறையை கட்டுப்படுத்த வேண்டும். கட்டிட உடல் உழைப்பு அமைப்புசாரா வாரியங்களை பாதுகாக்க வேண்டும். பெட்ரோல்,டீசல்,கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என ஆர்பாட்டத்தில் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
    Next Story
    ×