என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக பூமி தினத்தை முன்னிட்டு திருச்சி செங்குளம் காலனியில் சிறுவர், சிறுமியர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தபோது எடு
    X
    உலக பூமி தினத்தை முன்னிட்டு திருச்சி செங்குளம் காலனியில் சிறுவர், சிறுமியர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தபோது எடு

    மரக்கன்று நடும் விழா

    உலக பூமி தினத்தை முன்னிட்டு இன்று அரசு பள்ளி மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
    திருச்சி:

    உலக பூமி தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் திருச்சி செங்குளம் காலனி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் வீடுகளுக்குச் சென்று இயற்கை சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் செங்குளம் காலனி மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மகாலட்சுமி, வழக்கறிஞர் அண்ணாதுரை, முத்துச்செல்வி, அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அதனைத் தொடர்ந்து செங்குளம் காலனி பகுதியில் உள்ள ஒவ்வொரு மாணவ மாணவியரின் வீடுகளுக்கும் சென்று மரக்கன்றுகளை வழங்கி சிறுவர்கள் மூலமாக அந்த பகுதியில் உள்ள பசுமையான இடங்களில் நடவு செய்யப்பட்டது.

    மேலும் தூய்மையாக இந்தியாவாக நம்முடைய தேசத்தை மாற்றுவதற்கு அனைவரும் மரக்கன்றுகளை நடவேண்டும் என்று நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

    Next Story
    ×