என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பெண் போலீசை தாக்கிய வாலிபர்

    பெண் போலீசை வாலிபர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் நேற்று மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.  அப்போது அந்த பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது38) மதுபோதையில் கோவில் நிர்வாகிகளுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ்,

    அங்கு சென்று  சமாதானத்தில் ஈடுபட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த  பரமசிவம் பெண் போலீசின் க ன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இதைக் கண்ட பொதுமக்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண் போலீசை தாக்கியதாக கூறப்பட்ட பரமசிவத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×