என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலியில் நடந்தது.
    கடலூர்:

    என்.எல்.சி. இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலியில் நடந்தது. என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி மாநில பொதுச்செயலாளரும், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு செயலாளர்சேகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சொசைட்டி தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கிட வேண்டும், சீனியாரிட்டி பட்டியலில் விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் இணைத்திட வேண்டும், என்.எல்.சி.யில் யார்டு, சுரங்க பகுதிகளில் உள்ள பழைய வாகனங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்று, வாகனப்பற்றாக்குறையை சரி செய்து அதனை இயக்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×