என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மாஸ்க் தயாரிப்பு மீண்டும் சுறுசுறுப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் மாஸ்க் தயாரிப்பு மீண்டும் சுறுசுறுப்பு பணிகள் தொடங்கியுள்ளனர்.
    போச்சம்பள்ளி,

    தமிழகத்தில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாய மாக்கப்பட்டுள்ளது. 

    எனவே, மாஸ்க் தயாரிப்பு தொழில் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கரோனா பரவல் மிகவும் கட்டுக்குள் உள்ளது. 

    இருப்பினும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் சென்றால் ரு.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    தற்போது டெல்லி, உ.பி. மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வேகம் தணிந்ததுமே மாஸ்க் தயாரிப்பு தொழில் நிறுத்தப் பட்டது. 

    இதனால் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை இழந்து கூலி வேலைக்கு திரும்பினர். இந்நிலையில் மீண்டும் மாஸ்க் தயாரிப்பு சுறுசுறுப்படைந்துள்ளது. இதனால் பெண் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மத்தூர், காவேரிப் பட்டணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள் மாஸ்க் தயாரிப் பில் ஈடுபட்டு வந்தனர்.

    ஒரு மாஸ்க் தைப்பதற்கு கூலியாக 50 காசு பெற்றனர். தினந்தோறும் ரூ.500 வரை வருமானமாக கிடைத்து வந்தது.

    இவர்கள் தயாரிக்கும மாஸ்குகள் தமிழம் முழுவதும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    Next Story
    ×