என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் வளம் காக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம்
    X
    மண் வளம் காக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம்

    மண்வளம் காக்க வேண்டி விழிப்புணர்வு

    திருத்துறைப்பூண்டியில் மண்வளம் காக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது
    திருத்துறைப்பூண்டி:

    மண்வளம் காக்க வேண்டி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கான உலகளாவிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தவும் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு  தனி ஆளாக மோட்டார் சைக்கிளில் 100 நாட்களில் 25க்கும் மேற்பட்ட உலக நாடுகள் வழியாக 30,000 கி.மீ விழிப்புணர்வு பயணம் துவக்கி, இன்றோடு 33 நாள் பயணம் செய்துள்ளார்.

    மேலும் உலக பூமி தின நாளை முன்னிட்டும், நம் சந்ததியினருக்காகவும் சத்குரு செய்யும் இந்த மகத்தான செயலில் நம்முடைய பங்களிப்பாக திருத்துறைப்பூண்டி ஈஷா தன்னார்வலர்கள் சார்பில் மண் காப்போம் இயக்கம் பற்றி மக்களுக்கு விழிப்-புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் (நகராட்சி குளம்) அருகில் பதாகை ஏந்தி  மண் காப்போம் இயக்கத்தின் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    ஈஷா தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம், பசுமை சிறகுகள் அமைப்பு, ரோட்டரி அமைப்பினர், அன்பாலயா நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஈஷா மைய தன்னார்வலர் பால-குமார் வரவேற்றார். 

    ரோட்டரி தலைவர் அறிவழகன், செயலாளர் செந்தூர் டிரேடர்ஸ் செந்தில், டாக்டர். கருணாநிதி, அண்ணாதுரை, கிருஷ்ணா வீடியோ ஸ்ரீதரன் உள்ளிட்ட ரோட்டரி உறுப்பினர்களும், முத்தூஸ் கராத்தே முத்துக்குமரன், ஜாலி புக் செண்டர் முத்துக்குமரன், சமூக சேவகர் இமயவர்மன், சரபோஜி, முருகதாஸ், திருவாரூர் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் மோகன், ஆசிரியர்கள் சரவணன், மோகனசுந்தரம், தலைஞாயிறு வட்டாரச் செயலாளர் நெடுமாறன், வினோதா பாலகுமார் உட்பட 50-க்கும் மேற்-பட்டோர் கலந்துகொண்டனர்.

    ராய் டிரெஸ்ட் நிறுவனர் முனைவர் துரைராயப்பன் மண் வளம் பற்றி சிறப்புரையாற்றினார். ரோட்டரி சங்க வருங்கால தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார். பொது-மக்களுக்கு மண் காப்போம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×