என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி பறிமுதல்
    X
    ரேசன் அரிசி பறிமுதல்

    கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    கோடிமுனையில் இருந்து கேரளாவுக்கு சொகுசு காரில் கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதை கண் காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    குளச்சல் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சப் - இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்றிரவு குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    கோடிமுனையில் செல்லும் போது அங்கு கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக கேரள பதிவெண்கொண்ட ஒரு சொகுசு கார் நின்றுக் கொண் டிருந்தது. உடனே போலீசார் விரைந்து அருகில் சென்றதும் கார் டிரைவர் தப்பியோடிவிட்டார்.

    போலீசார் காரை சோதனை செய்ததில் அதில் சிறிய பிளாஸ்டிக் பைகளில் 1 டன் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சொகுசு காருடன் அரிசியையும் பறிமுதல் செய்து குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

    சொகுசு காரை விட்டு விட்டு தப்பியோடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழித்துறை அருகே நேற்றும் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
    Next Story
    ×