என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.
    X
    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மின்வெட்டு அடிக்கடி நிகழ்கிறது

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மின்வெட்டு அடிக்கடி நிகழ்கிறது என தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம் ஒன்றியம், தர்மபுரம், மேலகிருஷ்ணன் புதூர், பறக்கை, ஆத்திக்காட்டு விளை, கடலோர கிராமங்களான கேசவன்புத்தன் துறை, புத்தன் துறை, அகஸ் தீஸ்வரம், கொட்டாரம், சுசீந்திரம்,

    ஆரல்வாய்மொழி, அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 21-ந் தேதி இரவு அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டு ஏற்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. ஆனால், இப்போது நடக்கின்ற ஆட்சி யில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தால் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. 

    இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    மின்சாரம் பொதுமக்களின் அடிப்படை தேவையாக இருந்து வருகிறது. மக்களை பாதிக்கின்ற அரசின் எந்த செயலையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க. எப்போ தெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் தடை ஏற்படுவது வாடிக்கை யாகி விட்டது. 

    எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×