என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
குளச்சலில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி படுகாயம்
குளச்சலில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி படுகாயம் அடைந்தார்.
கன்னியாகுமரி:
மண்டைக்காடு அருகே கூத்தாவிளையை சேர்ந்தவர் ஆஸ்டின் (வயது 63). இவர் களிமார் பாலம் அருகில் பால் கடை நடத்தி வருகிறார்.
ஆஸ்டின் தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்தார். கடை அருகே வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வடக்கு சேவிளையை சேர்ந்த சிஜிவ் (19) என்பவர் ஆஸ்டின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் ஆஸ்டின் படுகாயமடைந்தார்.
அவரை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குளச்சல் போலீசார் சிஜிவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






