என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டம்
திருவாலங்காட்டில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்
திருவாலங்காட்டில் காரணமின்றி பணி நீக்கம் செய்து விட்டதாக கூறி கொசு ஒழிப்பு பணியாளர்கள் தீடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி:
திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட கனகம்மாசத்திரம், பூனிமாங்காடு, திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட, 20 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணி புரிந்து வந்தனர். இவர்கள் காரணமின்றி தங்களை பணி நீக்கம் செய்து விட்டனர் என்றும், அதற்கான விளக்கம் கேட்டும் சரியான பதிலளிக்கவில்லை என கூறியும் திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 ஆண்டுகளாக பணியில் உள்ளோம். திடீரென காரணமின்றி வேலை தர மறுக்கின்றனர். கொரோனாவின் போது இறந்தவர்களை புதைக்கும் பணியை நாங்கள் தான் செய்தோம். கொரோனாவால் 3 மாதங்கள் வீட்டிற்கு செல்லாமல் பணியில் ஈடுபட்டிருந்தோம். எங்களுக்கு மீண்டும் பணியை தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






