என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி விஜய் வசந்த் எம்.பி.
மனநலம் குன்றிய மாணவர்களுக்கான தடகளப் போட்டி- விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி விஜய் வசந்த் எம்.பி. உற்சாகப்படுத்தினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் குறைகளை தீர்ப்பதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவில் மனநலம் குன்றிய மாணவர்களுக்கான தடகளப் போட்டியை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அவர் உற்சாகப்படுத்தினார்.
நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் நவீன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story






