என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகார்
மாணவியை மதம் மாற்றம் செய்ய முயற்சி- ஆசிரியை மீது குழந்தைகள் நல ஆணையத்தில் தந்தை புகார்
ஆசிரியையின் செயலால் எனது மகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்று மாணவியின் தந்தை குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தமிழாசிரியை ஒருவர் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, மாணவியின் தந்தை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் புகார் அளித்த மாணவி, பெற்றோர், சம்பந்தப்பட்ட ஆசிரியர், சக வகுப்பு மாணவிகள், பிற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். அதில், ஆசிரியையின் செயலால் எனது மகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பள்ளியில் விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் சமரசம் பேச முயற்சிக்கின்றனர். குழந்தைகள் நல ஆணையம் இப்புகாரை விசாரித்து உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மற்றும் முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் வருகிற 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது.

Next Story