என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கோவையில் 1.99 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

    கடந்த சில வாரங்களாக தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
    கோவை: 

    நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்  தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி பணிகள் நடந்து வருகிறது. முன்கள பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

    இதில், கடந்த மாதம் 16-ந் தேதி முதல் 12 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும்பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே, கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

     கோவை மாவட்டத்தில் 99 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 90 சதவீதம் பேருக்கு 2&வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 56 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 

    12 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகள் 65 ஆயிரம் பேருக்கும், 15 முதல் 18 வயது வரையிலான குழந்தை கள் 1.34 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1 லட்சத்து 8 ஆயிரம் குழந்தைகளுக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

    தற்போது வரை மாவட்டத்தில் 12 வயது முதல் 18 வயது  வரையிலான சிறுவர்கள் 1.99 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்-பட்டுள்ளது.

    கடந்த சில வாரங்களாக தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தினமும் 2 ஆயிரத் திற்கும் குறைவான நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். பலர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். சிலர் முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாமல் உள்ளனர். 
     
    மீண்டும் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதால், தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நபர்கள் உடனடியாக மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 
    Next Story
    ×