என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவை ரெயில் நிலையம், வணிக வளாகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டம்

    வடமாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று காரணமாக மீண்டும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.
    கோவை: 

    புதுடெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. 

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு மிகவும் குறைந்து உள்ளது. தற்போது வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் வார்டுக்கு தலா ஒரு சிறப்பு அதிகாரி வீதம் 100 அதிகாரிகள் மீண்டும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    இது குறித்து கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கோவை மாநகராட்சி சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநக-ராட்சி சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

    தற்போது வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு ரெயில்களில் வரும் வட மாநில தொழிலாளர்களுக்கு ரெயில் நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. 

    மேலும் கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணி-யாற்றும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு கொரோனா கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×