என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடைகால சிறப்பு ரெயில்
மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்-பயணிகள் வலியுறுத்தல்
இந்த சிறப்பு ரெயிலில் முதல் பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்
கோவை:
நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலான கோடைகால சிறப்பு ரெயில் போக்கு வரத்து தொடங்கியது.
இந்த சிறப்பு ரயில் நேற்று இரவு 7 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் புறப்பட்டு இன்று காலை 7.35 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது.
இந்த ரெயில் சேரன்மாதேவி, அம்பை, கடையம், பாவூர், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி-புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை .திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, போத்தனூர் ,கோவை வழியாக இன்று காலை மேட்டுப்பாளையம் ரேயில் நிலையம் வந்து சேர்ந்தது.
சிறப்பு ரெயில் இன்று இரவு 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு அதே வழித்தடங்களில் பயணித்து நாளை காலை 7.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.
முதல் முறையாக இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் பயண அனுபவம் குறித்து கேட்ட போது அவர்கள் கூறியதாவது:
திவ்யா, கவிதா, மேனகா (சிவகாசி): நாங்கள் மூவரும் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறோம். நாங்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு செல்ல இந்த புதிய ரெயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறப்பு ரெயிலில் முதல் பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
மதுரையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கூறும் போது நான் மதுரையில் வங்கி ஒன்றில் அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாகவும் புதிய கோடைகால சிறப்பு ரயில் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும் இந்த ரெயிலை தொடர்ந்து நிரந்தரமாக இயக்க வேண்டும் எனவும் அப்படி இயக்கும் பொழுது சுற்றுலா பயணிகளின் வசதியை முன்னிட்டு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை செல்லும் மலை ரெயிலுக்கு மாறி செல்லும் வகையில் நேரத்தை சற்று மாற்றி அமைத்து ஊட்டி மலை ரெயிலுக்கு இணைப்பு அளிக்கும் வகையில் சிறப்பு ரெயிலை இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Next Story






