என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
பராமரிக்கப்படாத காலி மனைகளில் எச்சரிக்கை போர்டு
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பராமரிக்கப்படாமல் கிடக்கும் காலி மனைகளில் எச்சரிக்கை போர்டு வைக்கப்படும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாநகராட்சி பகுதியில் ஏராளமான காலிமனைகள் உள்ளன. இவை பெரும்பாலும் குப்பை கொட்டும் தளங்களாக மாறி புதர் மண்டி கிடக்கின்றன. பிளாஸ்டிக், டயர்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் வீசப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி அக்கம் பக்கத்தில் வசதிப்பவர்களை பதம் பார்க்கின்றன.
மேலும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடமாகவும் இருக்கின்றன. வெயில் காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன.
இதனால் பல தொற்று வியாதிகளும் ஏற்படுகின்றன. ஆகவே காலிமனைகளை சுத்தப்படுத்தி பராமரிக்க அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை குரல் நீண்ட காலமாக ஒலித்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து பயந்து போன உரிமையாளர்கள் காலிமனைகளை சுத்தப்படுத்த தொடங்கினர். அதன் பிறகு வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக வழக்கம்போல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். இதனால் மீண்டும் பிரச்சினை தலை தூக்கியது.
சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்திலும் பல கவுன்சிலர்கள் காலிமனை குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது மேயர் மு.அன்பழகன் காலிமனை குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
அதன்படி திருச்சி மாநகராட்சி பகுதியில் முறையாக பராமரிக்கப்படாமல் 25 ஆயிரம் காலிமனைகள் புதர் மண்டி கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கம்பிவேலி போட்டு குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்காமல் பார்த்துக்கொள்ள அதன் உரிமையாளர்களை மீண்டும் அறிவுறுத்த மேயர் மு.அன்பழகன் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
2019ல் பல பராமரிக்கப்படாத காலிமனைகளில் இந்த இடம் பொதுபயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் போர்டு வைக்கப்பட்டது. பின்னர் அதன் உரிமையாளர்களிடம் எழுதிவாங்கி கொண்டு போர்டு அப்புறப்படுத்தப்பட்டது.
கடந்த அக்டோபரில் சுகாதாரத்துறை சார்பில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமான 37 காலிமனைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுபோன்ற எச்சரிக்கை போர்டு மற்றும் நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கைகளை மீண்டும் மண்டல வாரியாக தொடங்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Next Story