என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
ஓடும் பஸ்சில் முதியவர் மர்ம சாவு
திருச்சியில் ஓடும் பஸ்சில் முதியவர் மர்மமான முறையில் இறந்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் குணசிலம் ஆமூர் பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரன் வயது 60. இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து புறப்பட்டு சத்திரம் பேரூந்து நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து திருவெறும்பூர் பெல் நிறுவனத்திற்கு செல்வதற்காக பஸ்சில் ஏறியுள்ளார்.
அப்போது அவர் பஸ்சில் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் உமாமகேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story