என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கொட்டாவூரில் தரமற்ற எண்ணெய் பயன்படுத்திய 2 ஓட்டல்காரர்களுக்கு அபராதம்
நல்லம்பள்ளி, கொட்டாவூரில் தரமற்ற எண்ணெய் பயன்படுத்திய 2 ஓட்டல்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம்,
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, வடக்குதெரு கொட்டாவூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில், உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் வடக்கு தெரு கொட்டாவூரில், சேலம் நான்கு வழி இணைப்பு சாலை அருகே உள்ள இரண்டு ஓட்டல்களில், தரமற்ற எண்ணெய் பயன்படுத்துவது தெரிந்தது. அதிகாரிகள் அந்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என எச்சரித்தனர்.
மேலும், தரமற்ற உணவு பொருட்கள், ஓட்டல்களில் இருந்த பிளாஸ்டிக் டம்ளர், கவர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, இரண்டு ஓட்டல்காரர்களுக்கும் அபராதம் விதித்தனர்.
தரமற்ற முறையில் உணவு பொருட்களை மீண்டும் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story






