என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    வடசந்தையூரில் ரூ.25 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

    வடசந்தையூரில் ரூ.25 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.
    பாப்பிரெட்டிப்பட்டி, 

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த வடசந்தையூரில் நேற்று சந்தை கூடியது. மேச்சேரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் வெள்ளாடிகளை விற்பனைக்கு ஓட்டி வந்திருந்தனர். 

    தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்க சந்தைக்கு வந்திருந்தனர். 

    சந்தையில் ஆடு ஒன்று ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது ஒட்டுமொத்தமாக நேற்று ரூ.25 லட்சத்துக்கு சந்தையில் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×