என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கோட்டப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த வாலிபர் சாவு
கோட்டப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள கோட்டப்பட்டி பைரநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் விக்னேஷ் (வயது27). கூலி தொழிலாளி.
இந்த நிலையில் சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண் டிருந்தார். அப்போது குலுவிநத்தம் அருகே வந்த போது நிலைதடுமாறி சாலையில் தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு விக்னேஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






