என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கம்பை நல்லூர் அருகே டவுன் பஸ் மோதி வாலிபர் காயம்
டவுன் பஸ் மோதி வாலிபர் காயம் அடைந்தார்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம்,கம்பை நல்லூர் அடுத்த கே.ஈச்சம்பாடியை சேர்ந்தவர் (விக்னேஷ்28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 19 ந்தேதி அன்று தாளநத்தத்தில் பல்சர் பைக்கில் சிந்தல்பாடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக பல்சர் மீது மோதியது. இதில் விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






