என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் உப்பு சத்யாகிரக பாதயாத்திரை நடைபெற்றது.
    X
    தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் உப்பு சத்யாகிரக பாதயாத்திரை நடைபெற்றது.

    பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் - கே.வி. தங்கபாலு பேட்டி

    இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பாபநாசத்தில் கே.வி. தங்கபாலு பேட்டியளித்துள்ளார்.
    பாபநாசம்:

    தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையில் உப்பு சத்யாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு பாபநாசத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்

    வரவேற்பளிக்கப்பட்டது. திருச்சியில் கடந்த 13-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை பாதயாத்திரை நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பாபநாசம் வட்டாரத்தில் பசுபதி கோவில், அய்யம்பேட்டை,

    சக்கராப்பள்ளி, மேல வழுத்தூர், கீழ வழுத்தூர், நெடுந்தெரு, பண்டாரவாடை, ராஜகிரி வழியாக குழுவினர் பாபநாசம் வந்தடைந்தனர். இந்த உப்பு சத்யாகிரக பாதயாத்திரை குழுவினர்களை

    தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், மாவட்ட துணைத்தலைவர் ரங்கராஜன், பாபநாசம் பேரூராட்சி துணைத்தலைவர் பூபதி ராஜா, பாபநாசம் ஒன்றிய தலைவர்கள் நாகேந்திரன்,

    முருகேசன், பாபநாசம் நகர தலைவர் பாலாஜி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பளித்தனர். பின்னர் பாபநாசத்தில் கே.வி. தங்கபாலு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகவும் சுதந்திர போராட்ட காலத்தில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் தண்டியிலே உப்பு சத்தியாகிரகம்

    நடத்தினார். அதேபோல் தமிழகத்தில் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் திருச்சி, வேதாரண்யம் இடையே மூதறிஞர் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்யாகிரக போராட்டம்

    நடைபெற்றது. பூரண மதுவிலக்கு இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும். அது வந்தால் தான் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×