என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பலியான ஆசிரியர் சிவன்ராஜ்
    X
    பலியான ஆசிரியர் சிவன்ராஜ்

    பஸ் மோதி ஆசிரியர் பலி

    பட்டுக்கோட்டையில் பஸ் மோதியதில் அரசு பள்ளி ஆசிரியர் பலியானார்.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில வருடங்களாக வேலை பார்த்து வந்தவர் மதுரை மாவட்டம், தத்தனேரி, களத்துபோட்டல்,

    நேரு நகர் பகுதியை சேர்ந்த சிவன்ராஜ் (வயது 31).இவர் கடந்த 15 தினங்களுக்கு முன் காரைக்குடி அருகிலுள்ள தீர்த்தலைக்காடு என்ற ஊரில் உள்ள பள்ளிக்கு மாறுதலாகி சென்றுவிட்டார்.

    இந்நிலையில் மாறுதலுக்கான எஸ்.ஆர் புக் வாங்க அவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த போது பெருமாள் கோவில் அருகே மகாராஜா சமுத்திரம் காட்டாற்று

    பாலத்தில் அவர் மீது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆசிரியர் சிவன்ராஜின் மீது பஸ்ஸின் டயர் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். 

    தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆசிரியர் சிவன்-ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத-னைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு

    அனுப்பினர்.இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்தினை ஓட்டிவந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சாத்தப்பட்டி வடகாடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (36) என்பவரிடம்

    விசாரணை மேற்கொண்டனர்.
    Next Story
    ×