என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் படுகாயம்
சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்
சாத்தூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து இளம்பெண் படுகாயமடைந்தார்.
விருதுநகர்
சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை பேர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் ரேவதி (வயது 25). மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2020ம் ஆண்டு இவருக்கும், சிப்பிபாறையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. செல்வராஜ் வெளிநாட்டில் வேலைக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் இரு வீட்டாருக்கும் இடையே வரதட்சணை நகை தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரேவதியின் தாயார் விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் செல்வராஜ் வீட்டிற்கு சென்று பேசினர்.
இதற்கிடையே சம்பவத் தன்று ரேவதி தனது தாயாரிடம் செல்போனில் பதற்றத் துடன் பேசியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. உடனே விஜயலட்சுமி, ரேவதியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து படுகாயங்களுடன் ரேவதி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மகளின் நிலைமையை கண்டு கண்கலங்கினார். இது குறித்து அவர் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ரேவதியின் கணவர் செல்வராஜ், அவரது தாயார் கல்யாணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரேவதி தானாகவே கியாஸ் சிலிண்டரை திறந்து விபத்தை ஏற்படுத்தி கொண்டாரா? அல்லது சதி திட்டமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






