என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
நாளை மறுநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூரில் நாளை மறுநாள் சனிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெறுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கிறிஸ்டியன் கல்வியியல் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, என்ஜினீயர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற படிப்புகள் படித்துள்ள 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ள வேலை வாய்ப்பற்ற ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 2,500-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குகிறது.
எனவே விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 04328-225362 என்ற தொலைபேசி எண்ணிலும், 9444094325 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story