என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா இடத்தில் மேயர் ஆய்வு

    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா இடத்தில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
    கரூர்:

    கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா ஆண்டுதோறும் சித்திரை கடைசி  ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ந 18ம் நாள் கம்பம் விடும் விழா நடைபெறும். கொரோனா  கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக வைகாசி பெருவிழா நடைபெறாத நிலையில் நிகழாண்டு  வைகாசி பெருவிழா மே 2 வது வாரத்தில் தொடங்குகிறது.

    விழாவின் உச்சக்கட்ட நிகழ்ச்சியான கம்பம் விடும் நிகழ்ச்சி கரூர் அமராவதி ஆற்றில்  நடைபெறும். இதனையொட்டி கரூர் அமராவதி ஆற்றில் கம்பம் விடும் இடத்தை மேயர் கவிதா பார்வையிட்டார். அப்போது அந்த இடத்தில் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
    Next Story
    ×