என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவையை வழங்கிடவேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்.
சரண் விடுப்பு ஒப்புவிப்பு உட்பட நிலுவை கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கரூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வைரப்பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர் பரிமணம் வரவேற்று பேசினார். கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் அறிவழகன் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார். இதில் 4 பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






