என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோட்டில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.
    X
    பாலக்கோட்டில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.

    பாலக்கோட்டில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    பாலக்கோடு,
     
    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் தமிழ்செல்வன் தலையை வகித்தார். மாவட்ட துணை தலைவர் குணசேகரன், செயலாளர் மாணிக்கம், முன்னாள் மாவட்ட துனைத் தலைவர் ருத்ரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்க வேண்டும்,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×