search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில்  கி.வீரமணி பேசிய போது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் கி.வீரமணி பேசிய போது எடுத்த படம்.

    நீட் மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை-கி.வீரமணி

    தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று பரமத்திவேலூர் கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.
    பரமத்திவேலூர்:

    திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணம் பொதுக்கூட்டம் பரமத்தி வேலூர் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. . 

    திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

    இன்றைக்கு பெட்ரோல், டீசல் விலையில் இருந்து இல்லத்தரசிகள் பயன்படுத்தும் கியாஸ் வரையில் அனைத்து பொருட்களும் உயர்ந்து விட்டது. தமிழ்நாடு கல்வியில் முன்னேறி இருக்கிறது. பெண் கல்வியில் முன்னேறி இருக்கிறது. 

    நீட் தேர்வில் இதுவரை 20 மாணவிகள் பலிபீடத்தில் நிறுத்தப்-பட்டுள்ளார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் மசோதாவை ஆய்வு செய்து அரசியல் சட்டப்படி நமக்கு உரிமை இருக்கிறது என்பதை காட்ட ஒய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட கமிட்டி அமைத்து ஆய்வு செய்து ஒரே மாதத்தில் ஆய்வு அறிக்கை கொடுத்தார்கள். 

    அதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பப்-பட்டது. ஆனால் 3 மாதம் கழித்து தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார். அதற்கு இவருக்கு அதிகாரம் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×