என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓவியப்பயிற்சி.
ஓவியப்பயிற்சி முகாம்
விருதுநகரில் ஓவியப்பயிற்சி முகாம் நாளை நடக்கிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக 6 வயது முதல் 16 வயதுவரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைப்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிவகாசி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை களில் பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைகளில் பகுதி நேரமாக இந்தபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தன்று ஓவிய பயிற்சி பட்டறை நடத்தவும், சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஓவியபயிற்சி முகாம் சிவகாசி மாநகராட்சி அண்ணாவி தோட்டம் ஏ.வி. டி. உயர்நிலைப்பள்ளியில் நாளை 21ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு மாணவர் கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றில் தேர்வு செய்யப் பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும்.
மேலும், கலந்து கொள் ளும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி பொருட்கள், பயிற்சி சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலையார்வமிக்க மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Next Story






