என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கலெக்டர் த.பிரபுசங்கர்.
    X
    ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கலெக்டர் த.பிரபுசங்கர்.

    வாகன ஓட்டிகளில் 2 சதவீதம் பேர் மட்டுமே தலைகவசம் அணிகின்றனர்

    வாகன ஓட்டிகளில் 2 சதவீதம் பேர் மட்டுமே தலைகவசம் அணிகின்றனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

        கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் 2 சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வந்தால் எரிபொருள் நிரப்பக்-கூடாது என்பது தொடர்-பான பெட்ரோல் பங்க் உரி-மையாளர்-களுக்கான ஆலோசனை மற்றும் கருத்து கேட்புக் கூட்டம்  நடைபெற்றது.  அதில் கலெக்டர் த.பிரபுசங்கர் பேசியதாவது,

    கரூர் மாவட்டத்தில் காலை, மாலை என இரு வேளை-களிலும் 76 இடங்களில் ஆய்வு மேற்-கொள்ளப்-பட்டது. அதில் வாகன ஓட்டிகள் 2 சதவி-கிதத்திற்கும் குறைவாகத்தான் தலைக்-க-வசம் அணிந்து வருகின்றனர். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கக்-கூடிய செய்-தியாகும்.      

    ஒரு குடும்-பத்தில் உள்ள தலைவர் உழைத்து குடும்பத்தை காப்-பாற்றக் கூடியவர், தலைக்-கவசம் அணியாமல் இறந்து விட்டால், அந்த குடும்பம் பொருளாதார ரீதியில் எவ்வளவு சிரமப்படும் என்பதை சமூகப் பொறுப்-புணர்வுடன் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

       கரூர் மாவட்டம் சாலை விபத்தில் இறப்பவர்களில் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இது நாம் பெருமைப்-படக்கூடிய செய்தி அல்ல. அரசு அலுவலர்கள் தலைக்-கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்-பட்டுள்ளது. அவ்வாறு அணிந்து வராதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்-பட்டு அதன்-மூலம் சம்பளமில்லா விடுப்பு அளிக்கப்பட உள்ளது.

    இருசக்கர வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக கண்டிப்பாக பெட்ரோல் பங்குகளுக்கு வந்துதான் ஆக வேண்டும். அவர்களிடம் பணியாளர்கள் அன்புடன் எடுத்துக்கூறி தலைக்கவசம் அணிந்து வந்தால் தான் உங்களுக்கு எரி-பொருள் நிரப்பப்படும் என்பதை எடுத்துக்கூற வேண்டும் என்றார். 
    Next Story
    ×