என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அரசு பள்ளி மாணவ,மாணவிகளுடன் காணொளி பயிற்சி வகுப்பு குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்
    X
    தேனி அரசு பள்ளி மாணவ,மாணவிகளுடன் காணொளி பயிற்சி வகுப்பு குறித்து கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்

    இணையவழி பயிற்சி குறித்து மாணவிகளுடன் கலெக்டர் உரையாடல்

    தேனி மாவட்டத்தில் இணையவழி பயிற்சி குறித்து மாணவிகளுடன் கலெக்டர் முருரளிதரன் உரையாடினார்
    தேனி:

    தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காணொளி வாயிலாக பயிற்சி வகுப்பு நடைபெற்றதை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக முதல்வர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன்மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய நான் முதல்வன் என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்குப் 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித்-திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.

    அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்குபடிக்கலாம், எப்படிப்படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். தமிழில் தனித்திறன் பெற சிறப்புப்பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், தேனி மாவட்டத்திலுள்ள 97 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11258 மாணவ மாணவியர் 12ஆம் வகுப்பில் பயின்று வருகின்றனர்.

    இவர்களின் மேற்படிப்புக்கு வழிகாட்டவும் வேலைவாய்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் முதற்கட்டமாகவும், 22 மற்றும் 23ஆம் தேதிகளில் 2ம் கட்டமாகவும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களின் வழிகாட்டுதல்கள் இணையவழி காணொளியில் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, மாணவர்கள் நேரலையாக காணும் வகையில் ஒளிபரப்பப்படுகிறது. மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாணவர்கள் இணையவழியில் தனித்தனியாக தங்களுக்குள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், பின்னூட்டத்தினை சமர்ப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணைய வழி காணொளி வாயிலாக பயிற்சி வகுப்புகள் குறித்து கலெக்டர் கலந்துரையாடி, மாணவ, மாணவியர்கள் தங்களது தனி திறனுக்கேற்ப கல்வி பயின்றிட வேண்டும்.

    அவ்வப்போது, எழுத்துதிறன், வாசிப்புத்திறனை மேம்படுத்தி தங்களது பெற்றோர்கள் மற்றும் பயிலும் பள்ளிக்கு பெருமை சேர்த்திடும் வகையில் கல்வி பயில வேண்டும் என மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

     இந்த ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×